​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.. போலீசிடம் வசமாக சிக்கிய திருடர்கள்

Published : Oct 20, 2024 6:26 PM

கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.. போலீசிடம் வசமாக சிக்கிய திருடர்கள்

Oct 20, 2024 6:26 PM

அரியலூர் மாவட்டம் திருமானூரில் வாகன சோதனையில் சிக்கிய திருடர்களிடம் இருந்து 10 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.

சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, 2 வாரங்களுக்கு முன் கூட்டுறவு வங்கி ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

அவர்களது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.