பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இந்தி விழா நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தவறான குற்றச்சாட்டுகளை முன் வைப்பது மலிவானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த் தாய் வாழ்த்தை பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியை அலுவல் மொழியாக அறிவித்தது ஜவஹர்லால் நேருதான் என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்குத் தெரியாதா என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.