சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின்னர் பேட்டியளித்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண், சட்டம் ஒழுங்கை காக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆணையத்தின் முன்பு, அருண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே அருண் பேசியதாகவும், சட்டம், ஒழுங்கை காக்கும் காவல் ஆணையரின்பேச்சை வேறுவிதமாக அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது என வாதிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட ஆணையம் வழக்கிலிருந்து அருணின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.