​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி கங்கா ஸ்நானம் - சிறப்பு ரயிலை அறிவித்தது ஐ.ஆர்.சி.டி.சி.

Published : Oct 18, 2024 7:06 AM

தீபாவளி கங்கா ஸ்நானம் - சிறப்பு ரயிலை அறிவித்தது ஐ.ஆர்.சி.டி.சி.

Oct 18, 2024 7:06 AM

தீபாவளியையொட்டி புண்ணியத் தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் 'கங்கா ஸ்நானம்' சிறப்பு ரயில் யாத்திரையை, ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

மண்டபத்தில் இருந்து வரும் 28ஆம் தேதி புறப்படும் ரயில், தீபாவளியன்று காசியில் கங்கா ஸ்னானம் செய்து, பின்னர் பிரயாக்ராஜ், கயா ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை வழியாக செல்லும், 'சேது சூப்பர் பாஸ்ட்' விரைவு ரயிலில், இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 9 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 29,420 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.