இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வானில் தென்பட்டது.
பூமிக்கு அருகே நிலவும் வரும்போது மற்ற முழு நிலவு நாட்களை விட அதிக வெளிச்சமாகவும், பெரிதாகவும் இருப்பதை சூப்பர் மூன் எனப்படுகிறது.
இந்த ஆண்டில் ஏற்கனவே ஆகஸ்ட்டில் ப்ளூ மூன், செப்டம்பரில் அறுவடை நிலவு என இரு சூப்பர் மூன்கள் வானில் தோன்றிய நிலையில் நேற்று ஹண்டர்ஸ் மூன் எனப்படும் முழு நிலவு தோன்றியது.
பழங்காலத்தில் இந்நாளில் மனிதர்கள் வேட்டைக்கு செல்வார்கள் என்பதை குறிக்கும் வகையில் அப்பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.