ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்தது ஒட்டு மொத்த உலகிற்கே நன்னாள் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள், அமெரிக்கர்கள் என 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு சின்வார் காரணமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் படையினரை முற்றிலுமாக ஒழிக்க இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உள்ளது என்றும் பைடன் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டில் பின்லேடனைக் கொல்ல ஒபாமா உத்தரவிட்ட பிறகு அமெரிக்கா முழுவதும் காணப்பட்டது போல் இஸ்ரேலிய நண்பர்களுக்கு இது நிம்மதியான நாள் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.