​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Published : Oct 17, 2024 8:19 PM



பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Oct 17, 2024 8:19 PM

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் ஏரியில் அமைச்சர் தாமோ அன்பரசன் திடீர் ஆய்வுக்கு சென்ற நிலையில் வீதியில் பிளிச்சிங் பவுடருக்கு பதில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மைதா மாவை வீதிகளிலும் சகதியிலும் தூவிச்சென்றதாக புகார் எழுந்துள்ளது

அமைச்சர் வரும் முன்பாக பிளீச்சிங் பவுடர் என்று மைதா மாவை வீதியில் தூவிய புகாருக்குள்ளாகி இருக்கிறது தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் ஏரியில் அமைச்சர் தாமோ அன்பரசன் திடீர் ஆய்வுக்கு சென்றார். மழை நீர் வடிகால் பணிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் தாமோ அன்பரசன் அங்கு வருவதற்கு முன்பாக சாலையோரங்களிலும் , சகதியிலும் கிருமி நாசினி என ப்ளீச்சிங் பவுடன் தூவப்பட்டது. ஆனால் அதில் இருந்து பிளீச்சிங் பவுடருக்கு உரிய வாசனை வரவில்லை, மாறாக பிசு பிசுவென்று இருந்ததால் பலருக்கும் சந்தேகம் உண்டானது.

சிலர் அதனை தொட்டுப்பார்த்து கோலமாவாக இருக்கலாம் என்ற நிலையில் தூய்மைப்பணியாளர் கூடையில் வைத்திருந்த பவுடரை சோதித்து பார்த்த போது அது பிளீச்சிங் பவுடர் இல்லை என்பது உறுதியானது. மாநகராட்சியில் பிளீச்சிங் பவுடர் என்று கொடுத்து விட்டதை , தாங்கள் வீதியில் தூவுவதாக அந்த பணியாளர் தெரிவித்தார்

மேலும் பெண்மணி ஒருவர் கையில் எடுத்து நுகர்ந்து பார்த்து விட்டு , அது பிளீச்சிங் பவுடர் அல்ல மைதா மாவு என்றார்

இது குறித்து அமைச்சர் தாமோ அன்பரசனிடம் கேள்வி எழுப்பியதும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றார்