உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாப்பா வெஸ்ட்ரேயின் ஓர்க்னி தீவுகளுக்கு இடையே இயக்கப்படுகிறது.
இரு தீவுகளுக்கும் இடையே 2.7 கிலோமீட்டர் இடைவெளி உள்ள நிலையில் பயண நேரம் 53 வினாடிகளாகவும் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நேரங்களுடன் சேர்த்து ஒன்றரை நிமிடம் மட்டுமே ஆவதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 10 பயணிகள் அமரும் வகையில் பைலட்டுகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாப்பா வெஸ்ட்ரே தீவில் சுமார் 70 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் நிலையில் தனித்துவமான பயணத்தை அனுபவிக்கும் வகையில் அதிகப்படியான சுற்றுலா பயணிகளை கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.