​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் ஆன்மாவாக இருப்பது மொழிதான் - பிரதமர் மோடி

Published : Oct 17, 2024 4:53 PM

நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் ஆன்மாவாக இருப்பது மொழிதான் - பிரதமர் மோடி

Oct 17, 2024 4:53 PM

நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் ஆன்மாவாக விளங்குவது மொழிதான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும், புத்தரின் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரத்துக்கு முன் நாட்டுக்குள் நுழைந்த அந்நியர்கள் நாட்டின் அடையாளத்தை அழிக்க முற்பட்டதாகவும், சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார். ஆனால், தற்போது சுயமரியாதை, தன்னம்பிக்கை, சுயகௌரவத்துடன் முன்னேறி வருவதால், பல பெரிய முடிவுகளை நாடு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இருந்து, 600-க்கும் மேற்பட்ட பழங்கால பாரம்பரிய கலைப் பொருள்கள் நாட்டுக்குத் திரும்ப கொண்டுவரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.