பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய 3 தீமைகளை சமரசமின்றி உறுதியாக ஒழிக்கப்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்றார். மாநாட்டில் பங்கேற்க வந்த ஜெய்சங்கரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்றார்.
மாநாட்டில் உரையாற்றிய ஜெய்சங்கர், எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை இரு தரப்பு வர்த்தகம், நட்புறவு உள்ளிட்டவற்றை ஊக்குவிக்காது என பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா அர்ப்பணிப்போடு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.