சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 180 தாழ்வான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பணி நடக்கும் பகுதிகளில், மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கும் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றுத் திருவிக நகர் மண்டலங்களில் மொத்தம் 43 இடங்களில் முழுமை பெறாமல் உள்ள மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.