​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தைவானைச் சுற்றி வளைத்து சீன ராணுவம் போர்ப்பயிற்சி... சீனாவுக்கு தைவான் அதிபர் லாய் கண்டனம்

Published : Oct 14, 2024 3:11 PM

தைவானைச் சுற்றி வளைத்து சீன ராணுவம் போர்ப்பயிற்சி... சீனாவுக்கு தைவான் அதிபர் லாய் கண்டனம்

Oct 14, 2024 3:11 PM

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரும் நிலையில், தைவானின் எல்லைகளை சுற்றி வளைத்து, சீன ராணுவம் போர்ப் பயிற்சியை மேற்கொண்டிருப்பதால் தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீன ராணுவத்தின் முப்படையினரும் 2 நாட்களாக மேற்கொள்ளும் போர்ப்பயிற்சி,பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும், இறையாண்மையைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை என்று சீன ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தைவானின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மிரட்டும் போர்ப்பயிற்சியை உடனே நிறுத்துமாறு தைவான் அதிபர் லாய் ச்சிங் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் நடவடிக்கைகளை தைவான் படைகள் தடுத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.