​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!

Published : Oct 14, 2024 6:57 AM

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!

Oct 14, 2024 6:57 AM

சென்னையில் விடிய, விடிய கனமழைப்பதிவு

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவு முதல், விடிய, விடிய பெய்த கனமழை

குறிப்பிட்ட இடைவெளி விட்டு பெய்த கனமழையால், சில பகுதிகளில், தாழ்வான இடங்களில், மழைநீர் தேங்கியது

வங்கக்கடலில் இன்று உருவாகிறது தாழ்வுப்பகுதி.!

வட தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் எனக் கணிப்பு.!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்

அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்

சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!

சென்னைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட்.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், இன்று மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும்

சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி, நகர, நகர, சென்னையில் மழையின் தாக்கம் அதிகரிக்க கூடும்

சென்னையில் புதன்கிழமை அதி கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னைக்கு புதன்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை மறுநாள் புதன்கிழமை அதி கனமழை பெய்யக்கூடும்

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வட தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும்

அடுத்த 48 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையை நோக்கி நகரும் என்பதால் புதன்கிழமையன்று ரெட் அலர்ட்

சென்னையின் அண்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை அண்டை மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்

சென்னை மட்டுமின்றி அதன் அண்டை மாவட்டங்களிலும், இன்று, கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னையின் அண்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழை.!

சென்னை அண்டை மாவட்டங்களுக்கு புதனன்று ரெட் அலர்ட்.!

15.10.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

16.10.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்

டெல்டா உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.!

திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

14.10.2024: விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

14.10.2024: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்

14.10.2024: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

14.10.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

14.10.2024: இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

))