​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேலின் தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஹெஸ்பொல்லா அமைப்பினர் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தகவல்

Published : Oct 13, 2024 7:27 AM

இஸ்ரேலின் தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஹெஸ்பொல்லா அமைப்பினர் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தகவல்

Oct 13, 2024 7:27 AM

இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத வான் மற்றும் தரைவழித் தாக்குதல் காரணமாக, ஹெஸ்பொல்லா அமைப்பு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

லெபனானில், ஹெஸ்பொல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்திவருகிறது.

இதனால், ஹெஸ்பொல்லாவின் முக்கிய நிதி ஆதாரங்களாக விளங்கும், வட்டியில்லா கடன் தரும் இஸ்லாமிய நிதி நிறுவனங்கள், வங்கிகள், மற்றும் ஈரானில் இருந்து விமானம் மூலமான பண வரவு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பெரும்பாலான வங்கிகள் திவாலாகிவிட்ட நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய நிதி நிறுவனத்தின் பெரும்பாலான கிளைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.