தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் முதல் போக பாசனத்திற்காக வரும் 16 ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி அதிகரித்து 117 புள்ளி 42 அடியாக உள்ளது.