ரயில் விபத்துக்கான காரணம் குறித்து முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் முதல்கட்ட விசாரணை அறிக்கை கிடைக்கும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தடம் மாறிய இடத்தில் தண்டவாளப் பகுதியை ஆய்வு செய்த அவர், சரக்கு ரயில் நின்ற தடத்தில் பயணிகள் ரயில் சென்றதே விபத்திற்கு காரணமாக தெரியவந்துள்ளது என்றார். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை முழுமையாக அகற்றி வழித் தடத்தை சீரமைக்க 15 மணி நேரம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.