​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூக்கடை பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை..

Published : Oct 10, 2024 4:13 PM

பூக்கடை பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை..

Oct 10, 2024 4:13 PM

சென்னை பூக்கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காவல்துறையினர் சோதனைமேற்கொண்டனர்.

அப்போது மின்ட் தெருவில் ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவரது கடையில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் என்னும் போதை பொருள் இருப்பதை கண்டறிந்து, அதனை கைப்பற்றினர்.

தலைமறைவான கடை உரிமையாளர் சுக்ராமை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.