அர்ஜென்டினா அரசு, பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வெகுவாக குறைத்ததை கண்டித்து அந்நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான புயனோஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் திறந்த வெளியில் வகுப்புகள் நடைபெற்றன.
விலைவாசி உயர்வையும், நிதி பற்றாக்குறையையும் சமாளிக்க முடியாமல் அர்ஜெண்டினா அரசு திணறிவருகிறது. இந்நிலையில், தீவிர வலதுசாரியான அதிபர் ஹாவியர் மிலே, பல்கலைக்கழகங்களில் இடதுசாரி சிந்தனைகள் திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி நிதியை கணிசமாக குறைத்துள்ளார்.