ஈரானின் கட்டமைப்பைத் தாக்கினால் அதற்கான பதிலடி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி தெரிவித்துள்ள கருத்தால், ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் மொசாத் தலைமையகத்தின் அருகிலுள்ள பகுதியை குறிவைத்து, பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியது.
இதற்கு பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்த நிலையில், ஈரானின் அணு சக்தி நிலையங்களின் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலின் எந்த இலக்கை எல்லாம் ஈரானால் எட்ட முடியும் என்பது எதிரிகளுக்கு நன்றாகத் தெரியும் என்றும், தங்களின் சூளுரையை இஸ்ரேல் சோதித்துப் பார்க்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.