​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Published : Oct 08, 2024 6:27 AM



“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Oct 08, 2024 6:27 AM

பணக்கார வீட்டு இளைஞர்களுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்த மாடல் அழகியை போலீசார் கைது செய்தனர். 

பணக்கார இளைஞரை கடத்தி அடைத்து வைத்து கத்தியால் குத்தி குத்தி சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட மாடல் அழகி ஜாய் ஜமீமா இவர் தான்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஷீலாநகரைச் சேர்ந்த செல்வந்தர் குடும்பத்து இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் மாடல் என்று பழகி காதல் வலைவிரித்த ஜமீமா, அந்த இளைஞருடன் வீட்டு வரைக்கும் சென்று வந்துள்ளார். குடும்பத்தினருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கூறி உள்ளார். இளைஞர் வீட்டில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததோடு, அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து இளைஞருடன் வீடியோகாலில் பேசி ஆசையை தூண்டிய ஜமீமா, மீண்டும் அவரை மட்டும் விசாகபட்டினம் வரவைத்துள்ளார் . விமான நிலையம் வந்திறங்கியதும் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குளிர்ப்பானத்தில் போதை மருத்து கலந்து கொடுத்து அவருடன் நெருக்கமாக இருப்பது போன்று ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்ததாகவும், அதனை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வைத்து ஓட்டல் ஒன்றில் வைத்து தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞர் தப்பிச்செல்ல முயன்ற போது, அவரை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கட்டிபோட்டு கத்தியால் குத்தி குத்தி சித்ரவதை செய்துள்ளார். இதற்கிடையே தப்பிச்சென்ற இளைஞர் பீமிலி போலீசில் புகார் அளித்தார்.

மாடல் அழகி ஜமீமாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லேப்டாப், டேப், மூன்று ஸ்மார்ட் போன்கள் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஜமிமாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து பணக்கார இளைஞர்களை குறிவைத்து இன்ஸ்டாகிராமில் காதல் வலை விரித்து பெரிய அளவில் பணம் பறித்தது தெரிய வந்ததாக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் பாக்சி தெரிவித்தார்.

ஜமீமாவின் கூட்டாளி இளைஞர்களை தேடிவருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று ஜமீமாவின் இன்ஸ்டா வீடியோகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். கேடி லேடி ஜமீமா மீது மற்றொரு செல்வந்தர் வீட்டு வாரிசு ஒருவரும் போலீசில் புகார் அளித்துள்ளார்.