நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில் கொடிக்கம்பம் நடுவதில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஊராட்சிமன்றத் தலைவியின் கணவரான மாரிமுத்து, தான் ஏற்கனவே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் த.வெ.கவின் கம்பத்தை நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
போலீஸார் தலையீட்டால் கம்பம் வேறு இடத்தில் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
இதுதொடர்பாக மாரிமுத்துவிற்கும் அவரது தெருவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.