​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரான் அணுசக்தி நிலையங்களை முதலில் தாக்குங்கள்... டிரம்ப் இஸ்ரேலுக்கு அறிவுரை

Published : Oct 05, 2024 12:38 PM

ஈரான் அணுசக்தி நிலையங்களை முதலில் தாக்குங்கள்... டிரம்ப் இஸ்ரேலுக்கு அறிவுரை

Oct 05, 2024 12:38 PM

ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், இஸ்ரேல் அவ்வாறு செய்யக்கூடாது என என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வடகரோலினாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட டிரம்ப், அணு ஆயுதங்களால் மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளதால் முதலில் அணுசக்தி நிலையங்கள் மீதுதான் இஸ்ரேல் தாக்குதல் தொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.