ரஷ்யாவின் கம்சட்ஸ்கி தீபகற்பத்தில், கழிமுகத்தில் சிக்கிக்கொண்ட 4 ஓர்கா இன திமிங்கலங்களை ஆராய்ச்சியாளர்கள் போராடி கடலுக்கு அனுப்பிவைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குட்டி திமிங்கலங்களும், 2 பெரிய திமிங்கலங்களும் ஆழம் குறைவான கழிமுக பகுதியில் சிக்கிக்கொண்டதால் அவைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
எந்திரங்கள் மூலம் கழிமுகத்தை ஆழப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்ட நிலையில், இறந்துவிடாமலிருக்க அவற்றின் மீது தண்ணீரை கோரி ஊற்றிவந்த தன்னார்வலர்கள், பெரும் போராட்டத்துக்கு பின் அவற்றை முகத்துவாரம் வழியாக கடலுக்கு அனுப்பினர்.