ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் மீண்டும் ஈடுபட்டால், இஸ்ரேலுக்கு கடுமையான முறையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.
கத்தார் அரசர் தமிம் பின் ஹமத் அல்-தானியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாகவும், இஸ்ரேலுடன் போரைத் தொடர விரும்பவில்லை என்றும் கூறினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரையோ, ரத்தக்களறியையோ ஈரான் விரும்பவில்லை என்றும், போர்களுக்கு இடையே எந்தத் தேசமும் பிராந்தியமும் முன்னேற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.