ஈரான் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் இயல்பாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு நிலைமை கடினமாக இருப்பதாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற அச்சுறுத்தலை இதுவரை சந்தித்ததில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் ஏவுகணைகளால் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளின் காட்சிகளையும், ஈரான் ஏவுகணைகளை இஸ்ரேல் பாதுகாப்பு அரண் இடைமறித்து அழித்த காட்சிகளையும் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் எனவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் தெரிவித்துள்ளார்.