ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பது தொடர்பாக ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவும் ஜி 7 நாடுகளும் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு முழு ஆதரவளிக்கப்படும் என்றும் அதன் மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈரான் மீது பொருளாதார வர்த்தகத் தடைகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது