​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு

Published : Oct 01, 2024 4:48 PM

தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு

Oct 01, 2024 4:48 PM

தென்னை விவசாயத்துக்கு பேர் போன கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மாடத்தட்டுவிளையை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

8-டிசி மோட்டார்களை கொண்டு பேட்டரியால் தென்னை மரத்தில் ஏறும் அந்த இயந்திரத்திற்கு அணில் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், கட்டளைக்கு இணங்க ரம்பத்தால் தேங்காய்களை பறிக்கவும், ஒலைகளை கவ்வாத்து செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.