​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் கலக்கும் ரசாயன கழிவுகள்.. நச்சு நுரை பொங்கி காற்றில் பறப்பதால் நோய்தொற்றும் அபாயம்

Published : Oct 01, 2024 2:38 PM

மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் கலக்கும் ரசாயன கழிவுகள்.. நச்சு நுரை பொங்கி காற்றில் பறப்பதால் நோய்தொற்றும் அபாயம்

Oct 01, 2024 2:38 PM

சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் கலக்கும் ரசாயனக் கழிவுகளால் நச்சு நுரை பொங்கி காற்றில் பறப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்பேட்டையில் உள்ள உரம், சோப்பு உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகள் மழை நீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுவதாகவும், அது சங்கிலி முனியப்பன் கோயில் அருகே மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி கால்வாயில் காவிரியில் கலப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

ரசாயனம் கலந்த நீரால் சின்னக்காவூர், தொட்டில் பட்டி, பெரியார் நகர், சேலம் கேம்ப் குடியிருப்புகளில் நச்சு நுரை பறப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.