​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே சென்ற முதியவர்... அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி காப்பாற்றிய லோக்கோ பைலட்

Published : Oct 01, 2024 1:21 PM

திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே சென்ற முதியவர்... அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி காப்பாற்றிய லோக்கோ பைலட்

Oct 01, 2024 1:21 PM

தமிழக - கேரள எல்லையான பாறசாலையில் 65 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது, அவ்வழியாக சென்ற ரயிலின் அடியில் தலை சிக்கிய நிலையில் உயிர் தப்பினார்.

கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் புனலூர் நோக்கிச் சென்ற மெமு ரயில், திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையை கடந்த போது இச்சம்பவம் நேரிட்டது. தண்டவாளத்தில் இருந்த நபர், லோக்கோ பைலட் ஹாரனை ஒலித்த போதிலும் ஒதுங்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவசர கால பிரேக்கை அழுத்தி ரயிலை லோக்கோ பைலட் நிறுத்தினார். எனினும், ரயிலின் முன் பகுதியில் உள்ள கம்பி மீது அந்நபர் மோதிய ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். காயம் ஏற்பட்டு அலறிய அவரை பயணிகளின் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தின் குறுக்கே சென்றாரா அல்லது கடந்து செல்ல முற்பட்ட போது விபத்தில் சிக்கினாரா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.