திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்ததாகக் கூறி கடந்த ஒரே வாரத்தில் வங்க தேசத்தைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வேலை தேடி வருபவர்களின் ஆவணங்களை முறையாக சோதித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு தொழிற் துறையினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கதேச அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டினர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடி பெயர்ந்திருக்கலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மற்றும் வட மாநில தொழிலாளர் குடியிருப்புகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.