My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!
Published : Sep 29, 2024 6:33 PM
My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!
Sep 29, 2024 6:33 PM
மோசடி வழக்கில் மூடப்பட்ட My v 3 ads நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரூபாயை ஆன்லைன் மூலம் திருடுவதற்காக அதில் அதிகாரியாக இருந்தவரையும் அவரது மனைவியும் கடத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
தருமபுரி அருகே உள்ள வெத்தலகாரன்பள்ளத்தில் புதிதாக அமைய உள்ள சிப்காட் பகுதியில் கடந்த 24-ந் தேதி கத்திக்குத்து காயங்களுடன் 55 வயது ஆண் மற்றும் 50 வயது பெண் சடலத்தை அதியமான் கோட்டை போலீஸார் மீட்டனர். விசாரணையில், இறந்தது தேனியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி பிரேமலதா என்பது தெரியவந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காரின் நம்பரை வைத்து தேனியைச் சேர்ந்த தேவராஜை பிடித்து விசாரித்தனர்.
அதில், உயிரிழந்த மணிகண்டன் My v3 ads என்ற நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்ததும், அவரது காருக்கு ஆக்டிங் டிரைவராக தேவராஜ் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் தேவராஜிடம் பேசிய மணிகண்டன், தனக்கு My v3 ads நிறுவன செயலி மூலமாக சுமார் 100 கோடி ரூபாய் வர வேண்டியிருப்பதாகவும் ஆனால், அந்த பணத்தை ஆன் லைன் டிரான்ஸ்பர் எடுக்க விவரமான ஆள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
மணிகண்டன், பிரேமலதா தம்பதியருக்கு குழந்தை இல்லாததால், மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க தேவராஜ் திட்டமிட்டுள்ளார்.
தனது நண்பர்கள் சிலர் நெட் பேங்கிங்கில் கைத்தேர்ந்தவர்கள் எனக்கூறி கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வின், தருமபுரியை சேர்ந்தவ சபரி, பிரவீன் குமார், நந்தகுமார் ஆகியோரை தேனிக்கு வரவழைத்துள்ளார் தேவராஜ்.
மணிகண்டனிடம் நிலம் ஒன்று குறைந்த விலைக்கு விற்பனைக்கு உள்ளதாக கூறிய தேவராஜ், அந்த இடத்தை பார்த்து விட்டு அப்படியே மை வி 3 ஆஃப்பில் உள்ள பணத்தை நெட் பேங்கிங் மூலம் ஆன் லைனில் மாற்றி விடலாம் என ஆசை வார்த்தைக்கு கூறி உள்ளனர்.
இதனை உண்மையென நம்பிய மணிகண்டனும் அவரது மனைவி பிரேமலதாவும் தேவராஜ் நண்பர்களுடன் ஒரே காரில் இடம் பார்க்க சென்றுள்ளனர்.
தனிமையான இடம் ஒன்றில் காரை நிறுத்தி, மணிகண்டன் கொடுத்த மை வி 3 ஆஃப் வங்கி கணக்கில் பாஸ்வேர்டை பயன்படுத்தி மொத்த பணத்தையும் வேறொருவர் வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தநர்.
அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு ஆப் ஒன்றின் மூலம் லாக் செய்யப்பட்டிருந்தது. பணம் கிடைக்காது எனத் தெரிந்ததும் கத்தியைக் காட்டி மிரட்டி பிரேமலதாவிடம் இருந்த 12.5 சவரன் தங்க நகையை பறித்தனர்.
வெளியே விட்டால் நகை கொள்ளையடிக்கப்பட்டதை போலீஸில் சொல்லி விடுவார்கள் என பயந்து கணவன்-மனைவி இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பிறகு சடலத்தை எவ்வாறு மறைப்பது என யோசித்த போது, தருமபுரியில் ஏராளமான காட்டுப்பகுதி இருப்பதால் அங்கு எடுத்துச் சென்று விடலாம் என முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, காரில் சடலத்தை ஏற்றிக் கொண்டு டோல்கேட் இல்லாத பகுதியாகவே சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊருக்குள் சுற்றி உள்ளனர்.
இரண்டு நாளாக காரிலேயே சடலம் இருந்த நிலையில் துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக சடலத்தின் மீது வழி நெடுகிலும் ஸ்பிரே அடித்துக் கொண்டே வந்து அந்தப்பகுதியில் வீசிசென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தேவராஜ், அஸ்வின், சபரி, பிரவீன்குமார், நந்தகுமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் 12.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்
வழக்கில் முக்கிய குற்றவாளியான தேவராஜி, காவல் நிலையத்தில் வழக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அழைத்து சென்று மாவுக்கட்டு போட்டு விட்டனர்.