பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தின் பிடியில் உள்ள பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம் என்று அவர் குறிப்பிட்டார். மற்ற நாடுகளின் நிலத்துக்கு ஆசைப்படும் பாகிஸ்தான் உலக அரங்கில் எதிர்க்கப்பட வேண்டும் என்றும், தனது செயல்களுக்காக பாகிஸ்தான் நிச்சயம் தண்டனையை அடைந்தே தீரும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து இந்தியப் பகுதியை விடுவிப்பது மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் மற்றும் தன்னாட்சி அதிகாரத்துக்காக நூற்றாண்டு காலமாகப் போராடி வருவதாக பாலஸ்தீனத்துடன் ஜம்மு-காஷ்மீரை ஒப்பிட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதற்கு ஜெய்சங்கர் தனது பேச்சின் மூலம் கண்டனத்தைப் பதிவு செய்தார்.