​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பார்சல் ஏற்றிச் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்..?

Published : Sep 28, 2024 8:10 AM

பார்சல் ஏற்றிச் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்..?

Sep 28, 2024 8:10 AM

விக்கிரவாண்டி அருகே பார்சல் வேனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த வேனின் பின்பக்கத்தில் புகை வந்ததைக் கவனித்த ஓட்டுநர் வேனை நிறுத்தியுள்ளார்.

வேனில் இருந்த பொருட்கள் எரியத் தொடங்கியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்