ஈரானில் தங்கள் ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியாத இடம் என்பதே இல்லை என்றும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அவர், அமெரிக்காவும், பிரான்சும் முன்மொழிந்த 21 நாள் போர் நிறுத்த யோசனையை நிராகரித்ததுடன், ஹெஸ்புல்லா தரப்பில் போரைத் தேர்வு செய்து விட்ட நிலையில், தங்கள் நாட்டு மக்கள் நிம்மதியாக வீடுகளில் இருக்க, இஸ்ரேலுக்கும் போரைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
ஈரான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், ஹெஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும் என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.