ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இடியும் நிலையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை 12 வாரத்திற்குள் இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடம் கட்ட பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள்,12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் பள்ளிக் கல்வித் துறை ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும் என்றும் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.