குரங்கம்மை நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிப்பதுடன், மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பீதி ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.