இஸ்ரேல் விமானங்களின் குண்டுவீச்சில், பெய்ரூட்டில் ஹெஸ்போலாவின் டிரோன்களைக் கையாளும் படையின் தலைவர் முகமது ஹூசைன் என்பவர் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து ஹெஸ்போலாவின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட கமாண்டருக்கு முக்கியப் பங்கு இருந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்கா, பிரான்ஸ் வகுத்த 21 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.