10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில், சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத், சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பணியாற்றியபோது தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை வேறு பெயரில் மாற்ற பலமுறை கைரேகையை திருத்தம் செய்ய தூண்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பத்திரப் பதிவு உதவியாளர்கள், சார்பதிவாளர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு ரவீந்திரநாத் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவீந்திரநாத், சென்னையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்