மெக்சிகோவில் டிராக்டர் தொழிற்சாலையை தொடங்கப்போவதாக அறிவித்த ஜான் டியர் நிறுவனத்துக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்போவதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நம்பர் ஒன் டிராக்டர் உற்பத்தி நிறுவனமான ஜான் டியர், உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் அமெரிக்காவில் உள்ள 2 தொழிற்சாலைகளை மூட போவதாக அறிவித்துள்ளது.
இதனால் 800 அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம் அதிபரானதும், வெளிநாடுகளில் கார் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்போவதாக எச்சரித்துவந்த டிரம்ப், முதன்முறையாக வேளாண் சாதன நிறுவனமான ஜான் டியர் விற்கும் அனைத்து பொருட்களுக்கும் 200 சதவீதம் வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.