கடலூர், கடற்கரை சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் சுந்தரி கடந்த மாதம் ஆய்வுக்கு சென்றபோது, மாணவர்கள் காலணி அணிந்து வகுப்பறைக்குள் வருவதால் குப்பைகள் சேருவதாக ஆசிரியர் கூறியதையடுத்து, இன்று அனைத்து வகுப்பறைகளுக்கும் மிதியடி வழங்கினார்.
மாணவர்களை காலணியுடன் அனுமதிக்கவேண்டும் என ஆசிரியருக்கு அறிவுறுத்திச் சென்ற நிலையில், இன்று மேயர் மீண்டும் சென்றபோது வகுப்பறை குப்பையாகவே காட்சியளித்தது.
சுத்தம் செய்ய ஊழியர்கள் வர காலதாமதமானதால், தானே துடைப்பத்தை எடுத்து வகுப்பறையை கூட்டிய மேயர், பள்ளியை தூய்மையாக வைக்க வேண்டும் என மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திச் சென்றார்.