கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான நில முறைகேடு வழக்கை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில், 3,800 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவசர கதியில் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், இதற்கு எதிரான சித்தராமையாவின் ரிட் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மைசூரில் முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், மாற்று நிலம் ஒதுக்கியதில் மெகா ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி அளித்திருந்தார்.