நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில், இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜூன் மாதம் சாலை ஓரம் போலிச் சான்றிதழ்கள் கிடந்தன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சுப்பையா பாண்டியனை திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்ய சிபிசிஐடி போலீசார், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது மனைவி பெயரிலும் போலி மருத்துவ சான்றிதழ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி மருத்துவச் சான்றிதழ் வழங்க, 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒஸ்தின் ராஜா என்பவரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.