​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு

Published : Sep 23, 2024 6:22 PM

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு

Sep 23, 2024 6:22 PM

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர டயாலிசிஸ் டெக்னீஷியன்களை பணியமர்த்த வேண்டும் என 2017-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2017-ம் ஆண்டு, ஆறாயிரம் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற நிலையில், 2023-ல் அது 36 ஆயிரமாக உயர்ந்தது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 2000-க்கும்  மேற்பட்ட டயாலிசிஸ் கருவிகள் இருந்தும், போதுமான டெக்னீஷயன்கள் இல்லாததால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.