மரக்காணம் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பக்கிங்காம் சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது.
பருவ கால மாற்றத்தின் காரணமாக கடல் நீர் பக்கிங்காம் கால்வாயில் கலந்ததால், இந்த கால்வாயின்இரண்டு பக்கமும் இருந்த விலைநிலங்களும் பயிர் செய்ய முடியாத அளவிற்கு உவர் நிலமாக மாறியதாக கூறப்படுகிறது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடல் நீர் புகுவதை தடுக்கும் வகையில், 163 கோடி ரூபாய் மதிப்பில் 2021-ல் தொடங்கப்பட்ட புதிய அணை கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன.
அணையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயின் 2 பக்கமும் மணலைக் கொட்டி தடுப்பு கரை அமைக்கும் பணியின்போது, வனத்துறை தங்களுக்கு சொந்தமான இடம் வருவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தால் கடந்த ஆண்டே அப்பணி கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் ஏற்கனவே நீர் நிரம்பியுள்ளதால், வடகிழக்கு பருவமழையின்போது வரும் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் என்று கருதி புதிய அணையின் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஷட்டர்களை உடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.