அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி செமி கண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பில் முதலீடு செய்வதற்கான அடிப்படைத் தேவைகள் இந்தியாவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களை வடிவமைத்து, இந்தியாவிலேயே தயாரிக்க வருமாறும் கேட்டுக் கொண்டார்.
அடோப் நிறுவனத்தின் சாந்தனு, கூகுள் அல்பாபெட் நிறுவனத்தின் சுந்தர்பிச்சை, என்விடியா ஜென்சன் ஹூவாங் உள்பட 15 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.