ரவுடிகளுக்கு எதிரான ஆபரேஷன் அகழி திட்டத்தின் கீழ் திருச்சியைச் சேர்ந்த ரவுடி பட்டறை சுரேஷை புதுச்சேரியில் வைத்து கைது செய்துள்ளதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டறை சுரேஷின் திருவெறும்பூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 66 சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இவை கட்ட பஞ்சாயத்து மற்றும் கந்துவட்டி தொழில் மூலமாக மிரட்டி பெறப்பட்டவை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.