கடந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முதலமைச்சர் தயங்குவது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மொத்தமே 18 ஆயிரம் கோடி ரூபாயைத் தான் முதலீடாக ஈர்த்துள்ளதாகவும், ஆனால், தெலங்கான முதலமைச்சர் ரூ.31,500 கோடியும், கர்நாடக அமைச்சர் 25 ஆயிரம் கோடி ரூபாயையும் முதலீடாக ஈர்த்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்ற நச்சுக் கருத்தை முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.