ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
Published : Sep 23, 2024 6:41 AM
ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
Sep 23, 2024 6:41 AM
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடன் வாங்கித் தருவதாக போலியான 2 கோடி ரூபாய் பணத்தைக் காட்டி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சதீஷ் என்பவர் தமது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய, தேவராஜ் என்பவரை கடனுக்காக அணுகியுள்ளார். 4 லட்சம் ரூபாய் கமிஷன் கொண்டு வந்தால் கடன் பெற்று தருவதாக கூறிய தேவராஜ் கார் டிக்கியில் 2 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளைக் காட்டியுள்ளார்.
அவர்கள் காரில் செல்லும் போது, 2 பேர் போலீஸ் சீருடையிலும், 3 பேர் டிப் டாப் உடையிலும் காரை நிறுத்தி சோதனை செய்து 4 லட்சம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து சதீஷ் காவல்நிலையம் சென்று புகார் அளித்ததன் பேரில் வந்தவர்கள் போலீசார் அல்ல என்று தெரிந்தது. இதையடுத்து தேவராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஷ்பாபு மற்றும் கோபி ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்