இலங்கை அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை பெற்றுள்ளார். 56 வயதான திசாநாயக்கே, 1968ம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர்.
இயற்பியல் பட்டம் பெற்று, 1987ம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி கட்சியில் இணைந்தார். கம்யூனிச பின்னணி கொண்ட திசநாயக்கே, 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகி அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அரசில் வேளாண் துறை அமைச்சரானார்.
2019ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்கி, பொருளாதார நெருக்கடியால் தவித்த கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை நடத்தினார். இந்த முறை தேர்தல் அறிவித்தது முதல் பிரச்சாரக் கூட்டங்கள் வரை, அனுரா குமார திசநாயக்கேவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது