உலகம் முழுவதும் இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இல்லங்களில் மகிழ்ச்சியை அள்ளித்தரும் பெண் குழந்தைகளின் சிறப்பை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...
ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதை வாரிசு என்பார்கள், அதே ஒரு பெண் குழந்தைப் பிறந்தால் மகாலட்சுமி என்பார்கள். மகள் பிறக்கும்போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி.
வீட்டை அன்பானதாகவும் அழகானதாகவும் மாற்றுவது பெண் குழந்தைகள். இருந்தாலும் மகன்கள் தாயிடமும் மகள்கள் தந்தையிடமும் அதிகமான பாசத்துடன் இருப்பது இயல்பு..
எத்தனையோ குடும்பங்களில் இன்று ஆணுக்கு நிகராக, குடும்பத்தையும், பெற்றோரையும் காத்து நிற்பவர்கள் பெண்கள்....
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இக்காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் முற்றிலுமாக ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்..